சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா- இந்தியா கவனம் செலுத்த வேண்டும் - மைக் பாம்பியோ


சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா- இந்தியா கவனம் செலுத்த வேண்டும் - மைக் பாம்பியோ
x
தினத்தந்தி 27 Oct 2020 8:47 AM GMT (Updated: 2020-10-27T14:17:24+05:30)

நாட்டின் பாதுகாப்புக்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பருடன்  அமெரிக்க யலாளர் மைக் வெளியுறவுத்துறை செ பாம்பியோ இந்தியா வந்து உள்ளார்.

இரு தரப்பினரும் இன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். இது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சிறந்த துல்லியத்தன்மைக்கு மேம்பட்ட அமெரிக்க செயற்கைக்கோள் மற்றும் வரைபடத் தரவை இந்தியாவுக்கு வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ  இந்தியத் தலைவர்களுடான பேச்சுவார்த்தைக்கு முன் கூறினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடனான பேச்சு வார்த்தைக்கு முன் பேசிய பாம்பியோ கூறியதாவது:- 

"நம்மைப் போன்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நெருக்கமாக வளர இன்று ஒரு புதிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

"நிச்சயமாக இன்னும் பல வேலைகள் நடைபெற உள்ளன. இன்று நாம் விவாதிக்க நிறைய உள்ளன, உகானில் தோன்றிய தொற்றுநோய்க்கான எங்கள் ஒத்துழைப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் துணை நிற்கும் என கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக  வெற்றி பெறுவதற்கான தனது பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக சீனா மீது கடுமையாக நடந்து கொண்டார், மேலும் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள நட்பு நாடுகளை  பாம்பியோ கூட்டணி சேர்க்க முயற்சித்து வருகிறார்.


Next Story