சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
புதுடெல்லி
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் வெளியுறவுத்துறை மைக் பாம்பியோ இந்தியா வந்து உள்ளார்.
இரு தரப்பினரும் இன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சிறந்த துல்லியத்தன்மைக்கு மேம்பட்ட அமெரிக்க செயற்கைக்கோள் மற்றும் வரைபடத் தரவை இந்தியாவுக்கு வழங்கும்.
பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியத் தலைவர்களுடான பேச்சுவார்த்தைக்கு முன் கூறினார்
இருதரப்பு பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டு புதுடில்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதால், சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது இந்தியாவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் பாம்பியோவின் சீன எதிர்ப்பு அறிக்கைகளை சுட்டி காட்டி தாக்கினார்.
வாங் கூறியதாவது:-
பாம்பியோவின் தாக்குதல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல."இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அவர் பனிப்போர் மனநிலை மற்றும் கருத்தியல் சார்புகளுடன் பேசி இருப்பதை பிரதிபலிக்கிறது. பனிப்போர் மனநிலையை கைவிட்டு, சீனாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை விதைப்பதை நிறுத்துவதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை குறைக்க நாங்கள் அவரை கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
Related Tags :
Next Story