தேசிய செய்திகள்

மனைவிகளுடன் தனிமையில் இருந்ததை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்து சம்பாதித்த கணவன் + "||" + MP man live streams X with 2 wives on apps; 2nd wife approaches police

மனைவிகளுடன் தனிமையில் இருந்ததை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்து சம்பாதித்த கணவன்

மனைவிகளுடன் தனிமையில் இருந்ததை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்து சம்பாதித்த கணவன்
தனது இரண்டு மனைவிகளுடன் தனிமையில் இருந்ததை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்து பணம் சம்பாதித்ததாக கணவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போபால்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த இளைஞர் மீது அவரது இரண்டாவது மனைவி போலீஸ்நிலையத்தில்  புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் ‘தன்னுடைய கணவர், தன்னை தொந்தரவு செய்து பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை பிறருக்கும் வீடியோவாக பகிர்ந்துள்ளார். என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. 

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பத்தாம் வகுப்புவரைதான் படித்துள்ளார். இருப்பினும், மிகுந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டவராக உள்ளார். அவர், பல்வேறு டேட்டிங் ஆப்களில் கணக்கு வைத்துள்ளார்.

அதன்மூலமாக பணம் சம்பாதிக்கும் வழியைக் கண்டறிந்துள்ளார். அவருடைய டேட்டிங் ஆப்பில் அவர் வைத்துள்ள புகைப்படத்தைப் பார்த்து, இவருக்கு லைக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். மெனு கார்டு போன்று இருக்கும் இந்த குறுஞ்செய்தியில், பாலியல் உறவு கொள்வதை நேரலையில் பார்ப்பதற்கான கட்டணங்களை வரையறுத்துள்ளார். முகம் தெரியுமாறு உறவு கொள்வதைப் பார்ப்பதற்கு ஒரு கட்டணம், முகம் தெரியாமல் உடல் அங்கங்களை மட்டும் பார்ப்பதற்கு ஒரு கட்டணமும் நிர்ணயித்துள்ளார். இந்தமுறையில், அவருடைய இரண்டு மனைவிகளுடனும் பாலியல் உறவு கொள்வதை நேரலையில் ஒளிபரப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

அவருடைய முதல் மனைவி பெங்களூருவைச் சேர்ந்தவர். அவர், சமூக வலைதளத்தின் மூலம்  நட்பாகி இவரை திருமணம் செய்துள்ளார். ஆன்மீக வகுப்புக்கு செல்லும்போது அங்கு ஒரு பெண்ணைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவி கணவனின் இந்தச் செயலுக்கு ஒப்புக்கொண்டு அவருக்கு ஏற்றாற் செயல்பட்டுவந்துள்ளார். இரண்டாவது மனைவிதான் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.