சம்பள நிலுவையை எதிர்த்து டெல்லியில் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சம்பள நிலுவை தொகையை எதிர்த்து டெல்லியில் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி (வடக்கு) நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனால் நோயாளிகள் அனைவரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி கழக மருத்துவர்கள் சங்கத்தின் (எம்.சி.டி.ஏ) பொதுச் செயலாளர் மாருதி சின்ஹா கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை விடுவிப்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, எனவே நாங்கள் இப்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.
Related Tags :
Next Story