"புதிய பீகார் ஒன்றைக் கட்டியெழுப்புங்கள்" - வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி வேண்டுகோள்
பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசு, மக்களுக்கு நன்மையான திட்டங்களை செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறிய சோனியா காந்தி, பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story