தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மூக்கு உடைபட்ட இம்ரான் கான்; ஈரான், சவுதி அரேபியா அனுமதி மறுப்பு + "||" + Imran Khan punched above his weight; snubbed by Saudi Arabia, Iran

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மூக்கு உடைபட்ட இம்ரான் கான்; ஈரான், சவுதி அரேபியா அனுமதி மறுப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மூக்கு உடைபட்ட இம்ரான் கான்; ஈரான், சவுதி அரேபியா அனுமதி மறுப்பு
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மூக்கு உடைபட்ட இம்ரான் கான்; ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வ்ழங்கபட்ட தினத்தை கருப்பு தின கொண்டாட்டத்திற்கு ஈரான், சவுதி அரேபியா அனுமதி மறுத்துள்ளது.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யபட்டதை ஒரு கருப்பு நாள் என்று அழைத்து நிகழ்ச்சியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. இஸ்லாத்தின் சன்னி மற்றும் ஷியா அதிகம் வாழும் நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகள் இதனை கொண்டாட அனுமதி மறுத்து விட்டன.

ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யபட்டதை ஒரு கருப்பு நாள் என்று அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது.  ஆனால் இந்த நிகழ்வை அனுமதிக்க ஈரான் அரசு மறுத்து விட்டது. 

ரியாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குள் ஒரு பொது நிகழ்வை நடத்த பாகிஸ்தானின்  திட்டங்களும் சவுதி அரேபியாவால் தடுக்கப்பட்டன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் (MOFA)அங்கு சர்வதேச பிரகடனப் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தது
20 நாடுகளிலிருந்தும், பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பங்கேற்பாளர்களை அழைத்து இருந்தது. வெற்றியாளருக்கு முதல் பரிசு 3,000 அமெரிக்க டாலர் என்றும், இரண்டாம் பரிசு 2,000 அமெரிக்க டாலர் என்றும் அறிவித்து இருந்தது.

இந்தியாவைத் தாக்குவதே போட்டியின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானை பொறுத்தவரை, பரிசுத் தொகை கூட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களைத் ஆசை காட்டவில்லை. அழைக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் அல்லது நிறுவனங்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. கொரோனா -19 நெருக்கடி காரணமாக அவர்கள் பயணம் செய்ய விரும்பவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். இதன் விளைவாக, கவனமாக திட்டமிடப்பட்ட பாகிஸ்தானின் பிரச்சார தாக்குதல் தோல்வியடைந்தது.

55 நாடுகளில் காஷ்மீர் கருப்பு தின விழாக்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற செயல்பாடுகள் அதிக வெற்றியை பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய பாதுகாப்பு படையினர்
பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்
2. ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சில் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
3. ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்; இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
4. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.
5. மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்
நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என கூறிய நிலையில் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.