மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்
உன் கர்ப்பத்திற்கு காரணம் என் கணவர்தான் என கூறிய மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்
அகமதாபாத்
ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில் வசித்து வந்தனர். மாமியார் மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நிகிதா, ரேகா இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.
அப்போது 4 மாத கர்ப்பமாக இருந்த நிகிதாவை பார்த்து ரேகா அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் தான் காரணம் எனவும், மாமனாருடன் தவறான தொடர்பை நிகிதா வைத்துள்ளார் எனவும் கூறினார்.
இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.பின்னர் உடல் மீது தீ வைத்துள்ளார், இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீபக்குக்கு போன் செய்து அது பற்றி கூறினர்.
உடனடியாக வீட்டுக்கு வந்த தீபக் உள்ளே சென்று பார்த்த போது ரேகா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததோடு அவர் எரிக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும் படுக்கையறையில் உட்கார்ந்திருந்த நிகிதா தான் கொலை செய்யவில்லை என கூறினார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நிகிதாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story