நவம்பர் 16-ம் தேதி சபரிமலை நடை திறப்பு: தினமும் 1000 பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் சுவாமியின் நடை, பக்தர்கர்களின் தரிசனத்திற்காக ஆண்டுதோறும் 3 மாதங்கள் திறக்கப்படும். இதையடுத்து இந்த வருடம் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நெறிமுறைகளை கூட்டம் சேரும் இடங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் நவம்பர் 16-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது.
வழக்கமாக நடைத்திறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர்கள் கூறியதாவது;-
நடை திறந்தபின் ஆரம்பக் காலங்களில் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொற்று இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ்கள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story