பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த படுகொலை பிரதமர் மோடி கண்டனம்


பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த படுகொலை பிரதமர் மோடி கண்டனம்
x
தினத்தந்தி 30 Oct 2020 2:48 AM GMT (Updated: 30 Oct 2020 2:48 AM GMT)

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

பிரான்சின் நைஸ் நகரில் தேவாலயத்தில் நுழைந்த நபர், திடீரென்று நடத்திய கத்தி குத்து தாக்குதல் காரணமாக மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதில், உயிரிழந்த 45 வயது மதிக்கத்தக்க வின்சென்ட் லோக்ஸ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார். மற்ற இரண்டு பேர் பெண், அதில் ஒருவர் தொண்டையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.

மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து உடனடியாக விரைந்து வந்த போலீசார், தேவாலயத்திற்குள் நுழைந்து குறித்த நபரை சுட்டுப் பிடித்தனர்.அதன் பின் பிரன்ஸ் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் தாரி 21 வயது மதிக்கத்தக்க வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவை சேர்ந்தவன், பிரஹிம் அவுசவுய் என்று அறியப்படும் அவன் 12 அங்குல நீளமுள்ள கத்தியை பயன்படுத்தியுள்ளான்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பிறந்த இவர், கடந்த 9-ஆம் தேதி இத்தாலியில் இருந்து பிரான்சிற்கு வந்துள்ளான். அதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு சென்று, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, நாட்கள் முடிந்த பின்னர் வெளியேறியுள்ளான்

குறித்த தாக்குதல் நடத்த உள்ளே நுழைந்தவுடன் போலீசார் சுமார் 14 முறை  துப்பாக்கிய சுடு நடத்தி அதன் பின் அவரை பிடித்துள்ளனர். 

பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story