தங்க கடத்தலுக்கு அரசு துறை வாகனங்கள் பயன்பாடு; அதிர்ச்சி தகவல் வெளியீடு
தங்க கடத்தலுக்கு அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
திருவனந்தபுரம்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கு பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் என்பவரும் சேர்க்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு தூதரக அளவில் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரூ.100 கோடி மதிப்புக்கு கூடுதலான தங்க கடத்தல்கள் நடந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரள பா.ஜ.க. தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தங்க கடத்தலுக்காக பல்வேறு மாநில அரசு துறைகளும் மற்றும் அவர்களின் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நோக்கத்திற்காக விளையாட்டு கவுன்சில் தலைவரின் கார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரள கிரிக்கெட் கூட்டமைப்புடன் தொடர்புடைய பினாமி சொத்துகள் மற்றும் ஹவாலா பணபரிமாற்றங்கள் உள்ளிட்டவை அடங்கிய பல்வேறு புகார்கள் பெறப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story