இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானம் ; இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு
பாகிஸ்தான் ஆளில்லா விமானம் குர்தாஸ்பூருக்கு அருகிலுள்ள இந்திய எல்லைக்குள் நுழைந்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி நடத்தியத்தை தொடர்ந்து பின்வாங்கியது.
சண்டிகர்:
குர்தாஸ்பூர் பிராந்தியத்தில் சனிக்கிழமை அதிகாலை ஒரு பாகிஸ்தான் ட்ரோன் எல்லை பாதுகாப்பு படையால் (பி.எஸ்.எஃப்) பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபின் தாகூர்பூர் கிராமத்தில் இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த தேவேந்தர் குமார் மற்றும் அசோக் குமார் என்ற இரண்டு எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு 11.35 மணியளவில் கேட்டு உள்ளனர். அந்த ஒலி பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்து உள்ளது பின்னர்படிப்படியாக இந்திய எல்லைக்குள் நுழைந்து உள்ளது
பாதுகாப்புப் படையிவீரர்கள் ஆளில்லா பறக்கும் விமானம் இந்திய எல்லைகள்நுழைவதை கண்டு உள்ளனர். இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் உடனடியாக ஆளில்லா விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த ஆளில்லா விமானம் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் பாகிஸ்தானின் எல்லைக்கு திரும்பியது.
ஆளில்லா விமானம் சுமார் 400 மீட்டர் உயரத்தில் 1800 மீட்டருக்கு மேல் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பறந்து சென்றது, இறுதியில் குர்தாஸ்பூரில் உள்ள தாக்பூர் கிராமத்தில் அதே குறிப்பு புள்ளியிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பியது.
இருப்பினும், ஆளில்லா விமானத்தின் சத்தம் அதிகாலை 12.22 மணியளவில் தாகூர்பூரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மற்றொரு வீரர் முகேஷ் யாதவ் கேட்டு உள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) கமாண்டர் கங்குலி சம்பவ இடத்திற்கு வந்து தனது மேற்பார்வையில் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்.
சர்வதேச எல்லையில் (ஐபி) எல்லையின் மறுபக்கத்தில் இருந்து ஆளில்லா விமானங்கள் அல்லது குவாட்கோப்டர்கள் காணப்படுவது இது முதல் தடவை அல்ல, ஏனெனில் இதுபோன்ற பல நிகழ்வுகளும் சமீபத்திய காலங்களில் பதிவாகியுள்ளன.
Related Tags :
Next Story