தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் முறையீடு
இடைத்தேர்தலுக்கான தனது நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 3 ஆம் தேதியன்று 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது. கமல்நாத்தின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் பறித்தது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான தனது நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
Related Tags :
Next Story