டெல்லியில் மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2020 9:55 PM IST (Updated: 31 Oct 2020 9:55 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மேலும் 5,062 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகரித்தே காணப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 5,062 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,665-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் 41 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  

டெல்லியில் இதுவரை  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  3,86,706 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து  3,47,476- குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன்  32,719-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,511- ஆக உள்ளது. 


Next Story