மத்திய பிரதேசத்தில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பரபரப்பு


மத்திய பிரதேசத்தில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 10:55 PM IST (Updated: 31 Oct 2020 10:55 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் இன்று அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் இன்று பகல் 12.50 மணியளவில் ரிக்டர் 3.1 அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த 27 ஆம் தேதி இதே சியோனி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் தாக்கம் நாக்பூர் மாவட்டம் வரை உணரப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாலை 6.16 மணிக்கு மீண்டும் சியோனி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஊர்மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மத்திய பிரதேசத்தின் மற்றொரு மாவட்டமான சிந்த்வாராவில் இன்று மாலை 5.20 மணிக்கு ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய புவியியல் ஆய்வுக் குழுவினர் சியோனி பகுதியில் முகாமிட்டு, நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

Next Story