குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் அறிவிப்பு: ராஜஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்


குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் அறிவிப்பு: ராஜஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்
x
தினத்தந்தி 1 Nov 2020 5:26 AM IST (Updated: 1 Nov 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

குஜ்ஜார் இன மக்கள், நவம்பர் -1ம் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் 8 மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இம்மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமூக இன கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

குஜ்ஜார் இன மக்கள். மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை கவனித்து வரும் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.

குஜ்ஜார் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது, முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநில அரசு பிரதிநிதிகளுடன், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும்,  நவம்பர் -1ம் தேதி  முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் பாரத்பூர், தோல்பூர், சவாய் மாதோபூர், தவுசா, டோங்க், புண்டி மற்றும் ஜலாவர் மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த காலங்களில், குஜ்ஜார் மக்கள் நடத்திய போராட்டங்களில்  வன்முறை வெடித்ததை அடுத்து இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டங்களால் ராஜஸ்தான் மாநிலமே ஸ்தம்பித்து போனது குறிப்பிடத்தக்கது.

Next Story