பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாறியுள்ளனர்; ஜே.பி. நட்டா சாடல்


பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாறியுள்ளனர்; ஜே.பி. நட்டா சாடல்
x
தினத்தந்தி 1 Nov 2020 8:37 AM IST (Updated: 1 Nov 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாறியுள்ளனர் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாடியுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற பின், கடந்த பிப்ரவரியன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டுவிட்டரில், புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களின் உயிர்த்தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம்.  

அதே நேரத்தில் நாம் எழுப்பும் கேள்விகள் என்னவெனில், இந்த தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்? தாக்குதல் தொடர்பாக விசாரணையில் வெளிவந்த விஷயம் என்ன? இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்? என்று பதிவிட்டார்.

இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தங்களது நாடே பொறுப்பு என பாகிஸ்தான் நாட்டு மந்திரி சமீபத்தில் ஒப்பு கொண்டார்.  இதனை குறிப்பிட்டு பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் இன்றளவில் பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளராக மாறியுள்ளனர் என சாடினார்.

Next Story