கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 மாதங்களுக்கு பின் 6 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
நாட்டில் 3 மாதங்களுக்கு பின் மொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இதேபோன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நிலையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று 46,964 பேருக்கு பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்து 84 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும், மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிரத்து 458 ஆக உள்ளது. இதனால், நாட்டில் 3 மாதங்களுக்கு பின் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3வது நாளாக 6 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இதேபோன்று நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 6.97% ஆக மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டில் அக்டோபர் 31ந்தேதி (நேற்று) வரை 10 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 303 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று ஒரு நாளில் 10 லட்சத்து 91 ஆயிரத்து 239 மாதிரிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story