வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 1 Nov 2020 3:45 PM IST (Updated: 1 Nov 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர். அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வருத்தமளிக்கிறது. சமுதாய சேவை, விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story