கேரளாவில் இன்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


கேரளாவில் இன்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Nov 2020 7:34 PM IST (Updated: 1 Nov 2020 7:34 PM IST)
t-max-icont-min-icon

கேரளத்தில் இன்று புதிதாக 7,025 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு பதிவாகும் மாநிலங்களில் ஒன்றாக தற்போது கேரளா விளங்குகிறது. அம்மாநிலத்தில் இன்று  புதிதாக 7,025 பேருக்கு  நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 89,675 ஆகியுள்ளது.

மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,512 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,010 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த தகவல்களை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

Next Story