சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.78 உயர்வு


சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.78 உயர்வு
x
தினத்தந்தி 2 Nov 2020 2:21 AM IST (Updated: 2 Nov 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைத்து வருகின்றன.

புதுடெல்லி, 

வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் கியாஸ் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் விலையை மாற்றி அமைக்கவில்லை. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆக நீடிக்கிறது. டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் நீடிக்கிறது.

ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் அதன் விலை ரூ.1,354 ஆகவும், டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது.

Next Story