வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பத்ம விருது வென்ற வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவு இசையுலகில் பெரிய வெற்றிடம் ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
கேரளாவின் திருப்புணித்துறை பகுதியில் கடந்த 1928ம் ஆண்டு பிறந்தவரான வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 92. இசை துறையில் சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவு இசையுலகில் பெரிய வெற்றிடம் ஏற்படுத்தி உள்ளது.
அவரது வயலின் இசை பரந்துபட்ட உணர்வுகளை அழகான முறையில் உள்ளடக்கி இருக்கும். அதில், நம்முடைய கலாசாரம் பின்னி பிணைந்து இருக்கும். இன்றைய இளைய இசை கலைஞர்களுக்கு தலைசிறந்த ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story