சில வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் செல்ல கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன: மத்திய அமைச்சர்


சில வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் செல்ல கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன: மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 3 Nov 2020 4:30 PM IST (Updated: 3 Nov 2020 4:30 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து முடக்கப்பட்டது.

புதுடெல்லி, 

சவுதி அரேபியா உள்பட சில வளைகுடா நாடுகளில்   இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுள் இன்னும் நீடிப்பதாக  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- "மே மாதம் 6ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றோம்.

இருப்பினும்,  வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை இன்னும் நீக்கவில்லை. இந்த நாடுகளுக்கு பயணிகள் வர கட்டுப்பாடுகளை எளிதாக்கினால் அதிக பயணிகளுடன் பறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story