நடிகை தீபிகா படுகோனின் மேலாளரை கைது செய்ய இடைக்கால தடை


நடிகை தீபிகா படுகோனின் மேலாளரை கைது செய்ய இடைக்கால தடை
x
தினத்தந்தி 3 Nov 2020 6:54 PM IST (Updated: 3 Nov 2020 6:54 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்காக கரிஷ்மா பிரகாஷ் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் பெயர் சம்பந்தப்பட்டிருந்தது. இதனால் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கரிஷ்மா பிரகாஷுக்குச் சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர் 

சமீபத்தில் கரிஷ்மா பிரகாஷின் அபார்ட்மெண்டில் நடந்த சோதனையில் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி கரிஷ்மாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்று கரிஷ்மா விசாரணைக்கு வரவில்லை. ஏன் வர முடியவில்லை என்பது குறித்த விளக்கமோ தகவலோ அதிகாரிகளுக்குத் தரவில்லை.

இதற்கிடையே தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம்,  போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்பு கரிஷ்மா பிரகாஷ் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதேவேளையில், வரும் 7 ஆம் தேதி வரை அவரைக் கைது செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Next Story