மராட்டியத்தில் வீழ்ச்சி பாதையில் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 4,909 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தல் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து, புதிதாக 4 ஆயிரத்து 909 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொடிய வைரசுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது. ஆனால் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் இன்று புதிதாக 4,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 92 ஆயிரத்து 693 ஆக அதிகரித்து உள்ளது.
இதில் 15 லட்சத்து 31 ஆயிரத்து 277 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 6 ஆயிரத்து 973 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 543 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 120 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 248 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story