மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,981 பேருக்கு கொரோனா


மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,981 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Nov 2020 1:50 AM IST (Updated: 4 Nov 2020 1:50 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,85,589 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று 56 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,013 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 36,443 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3,42,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story