ஒடிசாவில் வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் மறுசீரமைப்பு
ஒடிசாவில் வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் அறிவியல் மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் விதமாக, ஒடிசா அரசு சார்பில் வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
இந்த மறுசீரமைக்கப்பட்ட வாரியத்தின் தலைவராக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணைத் தலைவராக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிக்ரம் கேஷரி அருகா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திருத்தம்(2002) 6வது பிரிவின் கீழ் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மாநில வாரியம் 6 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story