மும்பையில் மன்லாட்ஜ்-மாதேரான் இடையே மீண்டும் டாய் ரெயில் சேவை தொடங்குகிறது
அமன்லாட்ஜ், மாதேரான் இடையே இன்று முதல் டாய் ரெயில் சேவை மீண்டும் காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது.
மும்பை,
மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாதேரானுக்கு அமன்லாட்ஜ் பகுதியில் இருந்து டாய் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை காரணமாக, இது உலக பராம்பரிய தலங்களில் ஒன்றாக கடந்த 2003-ம் ஆண்டு யுனஸ்கோவின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாய் ரெயில் சேவையை இயக்கும்படி மாநில அரசுக்கு மாதேரான் நகராட்சி கோரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு மாதேரானுக்கு டாய் ரெயில் களை இயக்க ரெயில்வே நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) முதல் அமன்லாட்ஜ்- மாதேரான் இடையே டாய் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. காலை 9.30 மணி அளவில் மாதேரானில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. மாலை 4.25 மணிக்கு கடைசி ரெயில் சேவை புறப்படும்.
இது பற்றி மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இயக்கப்படும் டாய் ரெயிலில் மூன்று 2-ம் வகுப்பு பெட்டியும், ஒரு முதல் வகுப்பு பெட்டியும், 2 சரக்கு பெட்டிகளும் உள்ளன. பயணிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story