கேரளாவில் அரசு பஸ்களில் 25 சதவீதம் கட்டண சலுகை
கேரளாவில் அரசு பஸ்களில் 25 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரளாவில் கொரோனா தளர்வையொட்டி, மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் பயணம் செய்வோருக்கு இந்த கட்டண சலுகை அளிக்கப்படும். இந்த நாட்களில் பொது விடுமுறையாக இருந்தால் இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த சலுகை திட்டம், மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story