பஞ்சாப்பில் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள்: ரெயில்வேக்கு ரூ.1,200 கோடி இழப்பு


பஞ்சாப்பில் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள்: ரெயில்வேக்கு ரூ.1,200 கோடி இழப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 7:24 AM IST (Updated: 5 Nov 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களால் ரெயில்வேக்கு ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் முக்கியமாக கடந்த செப்டம்பர் மாத கடைசியில் இருந்து 2 மாதங்களாக விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். 

ஜண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்பட 32 இடங்களில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் சரக்கு ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த நாட்களில் சுமார் 1,350 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நிலக்கரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இதன்மூலம் ரெயில்வேக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. விவசாயம், தொழில்கள், உள்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கியதாகவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

முன்னதாக மாநிலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாது எனவும், தண்டவாளங்கள் பாதுகாப்பு குறித்து உறுதியளிக்குமாறும் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங்குக்கு, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story