மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபம்;பா.ஜனதா அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - அமித் ஷா


மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபம்;பா.ஜனதா அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - அமித் ஷா
x
தினத்தந்தி 5 Nov 2020 1:52 PM IST (Updated: 5 Nov 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர். பா.ஜனதா மேற்கு வங்கத்தில் அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.

புதுடெல்லி: 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான  மக்கள்  மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர் என்பதை உணர முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜனதா மூத்த தலைவர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக பெரும்பான்மையுடன் வங்காளத்தில் அடுத்த அரசை பா.ஜனதா அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்குச் செல்வதைத் தடுக்க முதல்வர்  தடைகளை உருவாக்கி வருகிறார்.

நேற்றிரவு முதல், நான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறேன், மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கோபத்தை உணர முடிகிறது. நரேந்திர மோடியின் தலைமையில் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கு வங்கத்தில் பா.ஜனதா தொண்டர்கள்  தாக்கி கொலை செய்யப்படுகிறார்கள் என மாநில அரசை ஷா விமர்சித்தார்.


Next Story