காஷ்மீர்: பாம்பூரில் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீர்: பாம்பூரில் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2020 10:37 AM IST (Updated: 6 Nov 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்பூர் என்ற லால்போரா கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக  திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story