பீகார் சட்டசபை தேர்தல்; சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு


பீகார் சட்டசபை தேர்தல்; சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 6 Nov 2020 2:24 PM IST (Updated: 6 Nov 2020 2:24 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தர்பங்கா,

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 3-ந் தேதியும் நடந்து முடிந்தது.  3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.  வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

3-வது கட்ட தேர்தல் 78 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.  வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், ஹயகாட் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ரவீந்திரநாத் சிங் என்பவர் போட்டியிடுகிறார்.  அவர் மீது தர்பங்காவில் உள்ள தத்தோபூர் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story