கர்நாடகாவில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 பெண்கள் மீட்பு; போலீசார் அதிரடி நடவடிக்கை


கர்நாடகாவில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 பெண்கள் மீட்பு; போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2020 4:02 PM IST (Updated: 6 Nov 2020 4:02 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பெங்களூரு குற்ற பிரிவு போலீசார் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 பெண்களை மீட்டு 6 பேரை கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கில் முடங்கிய பொதுமக்களுடன், பொருளாதாரமும் தேக்க நிலையை சந்தித்தது.  இதன்பின்னர் கடந்த அக்டோபரில், மந்த நிலையில் இருந்து பொருளாதாரம் மீண்டு ஜி.எஸ்.டி. வரியும் ரூ.1 லட்சம் கோடி என்ற அளவை சந்தித்து சாதனை படைத்தது.

எனினும், கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அதிகமுள்ள மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.  இந்நிலையில், இதனை பயன்படுத்தி கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்தேறி வருகின்றன.  கர்நாடகாவில் போதை பொருட்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் திரை துறையினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் போதை பொருட்கள் வினியோகம் பள்ளி கூடங்கள் வரை பரவியுள்ளது என அதிர்ச்சி கலந்த தகவலை மாநில கல்வி மந்திரி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார்.  இதன்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதேபோன்று, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் காட்டன்பேட் பகுதியில் சில பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடந்து வருகிறது என புகார் எழுந்தது.

இதுபற்றி பெங்களூரு குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில், அந்த பகுதியில் செயல்பட்ட சிவாஸ் ஸ்டேஸ் என்ற டீலக்ஸ் விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 பெண்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர்.  இதனை குற்ற பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story