9,000 ஆண்டுகளுக்கு முன் ஆண்களைப்போல் பெண்களும் வேட்டையாடி உள்ளனர்


Matthew Verdolivo/UC Davis IET Academic Technology Services
x
Matthew Verdolivo/UC Davis IET Academic Technology Services
தினத்தந்தி 6 Nov 2020 4:30 PM IST (Updated: 6 Nov 2020 4:30 PM IST)
t-max-icont-min-icon

பெரு அகழ்வாராய்ச்சியின் போது 9,000 ஆண்டுகள் பழமையான புதைகுழிகளில் வேட்டையாடும் கருவிகளுடன் பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டிபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி
 
பண்டைய காலங்களில் வேட்டைக்காரர்களின் உருவத்தைப் பற்றி பொதுவாக நாம் தொடர்புபடுத்துவது ஆண்கள்தான், ஆனால் ஒரு புதிய கண்டு பிடிப்பில் பெண்கள் வேட்டையாடி உள்ளார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது.

பெரு நாட்டில் ல ப்ளீஸ்டோசீன் மற்றும் ஆரம்பகால ஹோலோசீன் மொத்தம் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எலும்புகள் அங்கு கண்டறியப்பட்டது. இது 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த புதைகுழிகளில், 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர், அவர்களில் 11 பேர் பெண்கள்.பெண்கள் வேட்டையாடுவதிலும் இந்த ஆய்வு போதுமான ஆதாரங்களை அளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

பெருவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின் படி, 17-19 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புகள், கல் எறிபொருள், கத்தி போன்ற ஒரு கலைப்பொருட்கள் மற்றும் ஒரு மிருகத்தை வெட்டுவதற்கும், அதை துடைப்பதற்கும் உள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

பெண்ணின் எலும்புகள் அவள் இறைச்சி சாப்பிடுவதை உறுதி படுத்தி உள்ளன.

கலிபோர்னியா பல்கலைக்கழக டேவிஸ், ஆராய்ச்சி குழுவை சேர்ந்த  மானுடவியலாளர் ராண்டி ஹாஸ் கூறியதாவது:-

"எங்கள் கண்டுபிடிப்புகள் பண்டைய வேட்டைக்காரர் குழுக்களின் மிக அடிப்படையான நிறுவன கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. வரலாறு மற்றும் சமகால வேட்டைக்காரர்கள் மத்தியில், ஆண்களே வேட்டைக்காரர்கள் மற்றும் பெண்கள் சேகரிப்பவர்கள் என்பது எப்போதுமே கூறப்பட்டு வந்துள்ளது. 

வேட்டைக் கருவிகளைக் கொண்ட பெண்களின் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் நடைமுறையில் உள்ள உலகக் காட்சிகளுக்கு பொருந்தவில்லை. தொல்பொருள்உண்மையான பெண் வேட்டையாடுவதை சுட்டிக்காட்டும் வலுவான ஆதாரமாக உள்ளது என கூறினார்.

Next Story