கேரள விமான நிலையத்தில் 2.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


கேரள விமான நிலையத்தில் 2.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Nov 2020 8:48 PM IST (Updated: 6 Nov 2020 8:48 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கம் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் கடந்த ஜூனில் 30 கிலோ தங்கம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், கேரளாவில் தங்க கடத்தல் தொடர்ந்து வருகிறது.

கேரளாவின் கோழிக்கோடு நகரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.  இதில் வந்திறங்கிய 5 பயணிகளிடம் இருந்து வெவ்வேறு சம்பவங்களில் 2,601 கிராம் அளவு தங்கம், சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று 6 பயணிகளிடம் இருந்து 59 ஆயிரம் எண்ணிக்கையிலான சிகரெட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.  இந்த பயணிகள் அனைவரும் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்தவர்கள்.

இதனை தொடர்ந்து மற்றொரு சம்பவத்தில், கண்ணூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய பயணி ஒருவரிடம் விமான நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 624 கிராம் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

அந்த நபர் அதனை அவரது ஆசன வாய் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.  அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் கல்வியறிவில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னிலை பெற்றுள்ள கேரளா, சமீப காலங்களாக கடத்தல் தொழிலிலும் முன்னிலை வகித்து வருகிறது வேதனை அளிக்கிறது.

Next Story