இந்தியா - இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு


இந்தியா - இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2020 7:22 AM IST (Updated: 7 Nov 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் கியூசெப் காண்டே அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகள் இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டேவும் கலந்துகொண்டு இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், கொரோனா வைரசின் மோசமான தாக்கத்தை சமாளிக்கும் வழிகள் குறித்தும் விவாதித்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி, “கொரோனா தொற்றானது, 2-ம் உலக போரை போலவே வரலாற்றில் ஒரு நீரோட்டமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. நாம் அனைவரும் இந்த புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். தொற்றுநோயால் எழும் சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.

மேலும்  2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து 

நிலைமை சீரானவுடன் இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் கியூசெப் காண்டே அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவின் 5-வது வர்த்தக பங்காளராக இத்தாலி உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தின், மதிப்பு 9 பில்லியன் டாலராகும். இந்தியாவில் சுமார் 600 இத்தாலி நிறுவனங்கள் உள்ளன. ஆடை வடிவமைப்பு, உள்கட்டமைப்பு எரிசக்தி, மருத்துவம் மற்றும் காப்பீடு போன்றவற்றில் முதலீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Next Story