அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பார்கள் - நாராயணசாமி நம்பிக்கை
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று இரவு வெளியான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் நாட்டின் முதல் பெண் துணை அதிபராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்த துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “புதிய அதிபர் மற்றும் துணை அதிபரின் கீழ் இந்திய-அமெரிக்க உறவுகள் மேலும் வலுப்பெறும். அவர்கள் லட்சக்கணக்கான இந்தியர்களைப் பாதுகாப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
Related Tags :
Next Story