இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்துகள் இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே தொற்றில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற தனிமனித கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. அதே நேரம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் தொற்று பாதித்தவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தொற்று சங்கிலி உடைக்க முடிகிறது. இதனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் இந்தியாவை பொறுத்தவரை ‘பரிசோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல்’ போன்ற செயல்பாடுகள் தாரக மந்திரமாகவே பின்பற்றப்படுகிறது. இதனால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுவதுடன், பாதித்தவர்களும் விரைவான சிகிச்சை மூலம் குணமடையும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
இந்தியாவின் இந்த தீவிர நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகள் தினமும் அதிக எண்ணிக்கையில் குணமடைந்து வருகின்றனர். அந்தவகையில் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நிலவரப்படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,53,657-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 48,405 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79,17,373-ஆக அதிகரித்தது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 490 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,26,611-ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 45,240 பேர் உயிரிழந்தனா். நாடு முழுவதும் 5,09,673 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 11 நாட்களாக 6 லட்சத்துக்கு கீழேயே நீடித்து வருகிறது. இது அரசுகள் மற்றும் மருத்துவத்துறைக்கு சற்று ஆறுதலை அளித்து இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
நவம்பா் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11,85,72,192 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், நேற்று மட்டும் 8,35,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன' என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story