அமெரிக்க மக்கள் தவறை திருத்திக் கொண்டுள்ளனர் ; சிவசேனா மறைமுக தாக்கு


அமெரிக்க மக்கள் தவறை  திருத்திக் கொண்டுள்ளனர் ; சிவசேனா மறைமுக தாக்கு
x
தினத்தந்தி 9 Nov 2020 12:16 PM IST (Updated: 9 Nov 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்ததையும் பீகார் சட்டமன்ற தேர்தல் சூழலையும் ஒப்பிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

மும்பை,

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோற்கடிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவும் இதிலிருந்து கற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும். அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு டிரம்ப் ஒருபோதும் பொருத்தமானவராக இருந்தது இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறை அமெரிக்க மக்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ளனர்.  

டொனால்டு டிரம்ப் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. டிரம்ப் தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொண்டால் அது நல்லதாக அமையும்.  அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றை விட வேலைவாய்ப்பின்மை பெருந்தொற்று அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் அதிகாரம் மாற்றப்பட்டு விட்டது. 

பீகார் தேர்தலை எடுத்துக்கொண்டால் நிதிஷ் குமார் தலைமையிலான  தேசிய ஜனநாயகக் கூட்டணி  தோல்வி அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மாநிலத்திலும் நாட்டிலும் நம்மைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை.  எனவே மாயையிலிருந்து தலைவர்களை வெளியேற்றும் பணியை மக்கள் துவங்கிவிட்டனர்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story