அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம்: வெங்காயம், உருளை விலை உயர்வு; பிரதமருக்கு மம்தா கடிதம்


அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம்:  வெங்காயம், உருளை விலை உயர்வு; பிரதமருக்கு மம்தா கடிதம்
x
தினத்தந்தி 9 Nov 2020 5:03 PM IST (Updated: 9 Nov 2020 5:03 PM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தினால் வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது என பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் இடைத்தரகர்களை ஊக்குவிக்கிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றின் விலை உயர்ந்து விடுகிறது.  இதனால் நுகர்வோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படும் சூழலை வேடிக்கை பார்த்து கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.  எங்களுக்கு அதிகாரம் இல்லாத சூழலில் உடனடியாக நீங்கள் தலையிட்டு இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story