மத்திய பிரதேச இடைத்தேர்தல் நிலவரம்: பாஜக 17 இடங்களில் முன்னிலை


மத்திய பிரதேச இடைத்தேர்தல் நிலவரம்: பாஜக 17 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 10 Nov 2020 12:13 PM IST (Updated: 10 Nov 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது. 

அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 17 இடங்களில் தற்போது பாஜக முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடத்திலும் முன்னிலை வகித்து வருவதாக தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story