பெங்களூருவில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
பெங்களூரு பாபுஜி நகரில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்,
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இன்று எதிர்பாராத விதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதனால் வெகு உயரத்திற்கு வானத்தில் அடர்த்தியான புகை எழுந்தது.
இந்த இரசாயன தொழிற்சாலை அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அங்குள்ள அனைவரையும் வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலைக்கு வெளியே ஓடி வந்தனர். இந்த விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தீ விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story