பீகார் தேர்தல் முடிவுகள்: பா.ஜனாதா - நிதிஷ் கூட்டணி தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
243 தொகுதிகள் உள்ள பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை அமைக்க 122 இடங்கள் தேவை பீகார் மாநிலத்தை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
பாட்னா
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.
இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பீகார் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக தோன்றினாலும், பீகார் தேர்தலின் இறுதி முடிவுகளுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.
மாலை 5 மணி நிலவரப்படி பா. ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 இடங்களிலும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி' 99 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
முடிவுகள் வெளியான இரு தொகுதிகளில் ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன.
Related Tags :
Next Story