குஜராத், கர்நாடக இடைத்தேர்தல்; அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க.


குஜராத், கர்நாடக இடைத்தேர்தல்; அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க.
x
தினத்தந்தி 10 Nov 2020 2:58 PM GMT (Updated: 10 Nov 2020 2:58 PM GMT)

குஜராத் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலுடன், 11 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதில் அரசியல் பரபரப்புக்கு இடையே கட்சிகளின் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வந்தன.  இந்த நிலையில், குஜராத் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 8 தொகுதிகளையும் ஆளும் பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

இதேபோன்று கர்நாடக கர்நாடக இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நடந்த ஆர்.ஆர். நகர் மற்றும் சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Next Story