பீகார் சட்டசபை தேர்தல்; 93 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு


பீகார் சட்டசபை தேர்தல்; 93 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2020 9:57 PM IST (Updated: 10 Nov 2020 9:57 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-28 மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம்-25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 93 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  இவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதேபோன்று மகாகட்பந்தன் கூட்டணியில் உள்ள ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

இவ்விரு கட்சிகளும் அடுத்தடுத்து பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.  வாக்கு எண்ணிக்கை இரவிலும் தொடரும் என்று ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுதவிர ஐக்கிய ஜனதா தளம்-17, காங்கிரஸ்-7, சி.பி.ஐ. (எம்-எல்)-6, வி.ஐ.பி.-2 மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம்.-2 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி, சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), எச்.ஏ.எம்.(எஸ்) மற்றும் சுயேட்சை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

Next Story