வாய் நீளம்... ஆனால் அதை வைத்தே சம்பாதிக்கிறார் ஒரு இளம் பெண் - வீடியோ பாருங்க


வாய் நீளம்... ஆனால் அதை வைத்தே சம்பாதிக்கிறார் ஒரு இளம் பெண் - வீடியோ பாருங்க
x
தினத்தந்தி 11 Nov 2020 6:20 AM GMT (Updated: 2020-11-11T11:50:43+05:30)

உலகின் மிகப்பெரிய வாய் உள்ள இளம் பெண் டிக்டாக் மூலம் மூன்று மாதங்களில் 7.5 லட்சம் பின் தொடர்பவர்களை பெற்று சாதனை புரிந்து உள்ளார்.

புதுடெல்லி

சமந்தா ராம்ஸ்டெல் (30 வயது) என்ற பெண், மிகவும் அசாதாரண அம்சத்திற்காக டிக்டாக்கில் பிரபலமானவர். உலகின் மிகப்பெரிய வாய் உள்ள பெண் என்பதால் அவர் டிக் டாக்கில் பிரபலமானார். ராம்ஸ்டெல் டிக்டாக்கில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். 

ராம்ஸ்டெல் தனது வாய் தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவு 3.75 அங்குலத்திற்கு மேல் 'கிட்டத்தட்ட நான்கு அங்குலங்கள் இருக்கலாம் என்று கூறி உள்ளார்.

ஆன்லைனில் பகிர்ந்த ராம்ஸ்டெல்லின் வீடியோவில் ஒரு முழு சாண்ட்விட்சை அவர் வாய்க்குள் வைப்பதைக் காட்டுகிறார். ஒரு ஆப்பிள் முழுவதையும் அவள் வாய்க்குள் வைத்து கடித்தார். அவள் வாயின் நீளத்தை அளவிட ஒரு டேப்பைப் பயன்படுத்துகிறார்.

அமெரிக்காவின் கனெக்டிகட்டில் வசித்து வரும் ராம்ஸ்டெல் விற்பனை பிரதிநிதியாக உள்ளார், தனது திறமைகளை வெளிப்படுத்த ஒரு டிக்டாக் கணக்கைத் தொடங்கினார். மூன்று மாதங்களில், அவர்  8 லட்சம் பின்தொடர்பவர்களுக்கு நெருங்கி உள்ளார்.

சமந்தா ராம்ஸ்டெல் கூறியதாவது:-

"நான் 2019 இலையுதிர்காலத்தில் ஒரு டிக்டாக் கணக்கை தொடங்கினேன். ஆனால் ஏப்ரல் 2020 இல் கொரோனா பரவும் வரை நான் எதையும் பகிர்ந்தது இல்லை.  ஊரடங்கால் நான் பிரபலமடையத் தொடங்கினேன், நான் நிறைய வேடிக்கையான முக வீடியோக்கள், நகைச்சுவை ஸ்கிட்கள் மற்றும் பாடும் வீடியோக்களை உருவாக்குவேன். என்னுடைய வீடியோக்கள் வைரலாகி விட்டது என்று அவர் கூறினார்.

நல்ல விஷயம் என்னவென்றால், அவர் இப்போது தனது வீடியோக்களில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்கிறார்.  சில சிறந்த வீடியோக்களை 5 கோடிக்கும் அதிகமான முறை பார்த்து உள்ளனர்.Next Story