செய்தி இணையதளங்கள்- செய்தி ஏஜென்சிகள் தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது


செய்தி இணையதளங்கள்- செய்தி ஏஜென்சிகள் தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
x
தினத்தந்தி 11 Nov 2020 3:41 PM IST (Updated: 11 Nov 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் செய்தி இணையதளங்கள் செய்தி ஏஜென்சிகள் ஆகியவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

புதுடெல்லி

ஆன்லைன் செய்தி இணையதளங்கள் மற்றும் செய்து ஏஜென்சிகள் ஆகியவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஆன்லைன் திரைப்படங்கள், டிஜிட்டல் செய்திகள் மற்றும் செய்தி ஏஜென்சிகளை கொண்டு வரும் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கபபட்டு உள்ளது.

நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.

2019 ஆம் ஆண்டில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடக சுதந்திரத்தைத் தடுக்கும் எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்காது என்று கூறியிருந்தார். 




Next Story