இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Nov 2020 4:00 PM IST (Updated: 11 Nov 2020 4:00 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

* ஏசி, எல்.இ.டி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது.

* மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு 

* ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி, உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடி வழங்கப்படும்.

* சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடி, இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடி, ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடி ஊக்கத்தொகை.

* ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும் என்று கூறினார்.

Next Story