லடாக் எல்லை விவகாரம்: 8 நாட்களுக்குள் சீனா தனது படையில் 30 சதவீதத்தை திரும்பப் பெற ஒப்புதல்


லடாக் எல்லை விவகாரம்: 8 நாட்களுக்குள் சீனா தனது படையில் 30 சதவீதத்தை திரும்பப் பெற ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Nov 2020 12:10 PM GMT (Updated: 2020-11-11T17:40:01+05:30)

லடாக் எல்லை நிலைப்பாடு: சீனா படைகளை திரும்ப பெற ஒப்புக்கொள்கிறது, 8 நாட்களுக்குள் 30 சதவீத படைகளை பின்வாங்குகிறது.

புதுடெல்லி: 

கிழக்கு லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சுஷூலில் எட்டாவது சுற்று ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் (பி.எல்.ஏ) வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் பேச்சுவார்த்தைகள் 
நேர்மையாகவும், ஆழமாக மற்றும் ஆக்கபூர்வமானவையாக இருந்தது. இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டனர். 

இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆனால் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. பிராந்தியத்தில் பிரச்சினைக்குரிய சில பகுதிகளிலிருந்து படைகளை விலக்கி கொள்வதாக சீனா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, பிராந்தியத்தில் இருந்து எட்டு நாட்களுக்குள் சீனா தனது படையில் 30 சதவீதத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், இரு நாடுகளின் வீரர்கள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிருக்கு ஆளாகியுள்ளனர் என்று ஐ.ஏ.என்.எஸ் அறிக்கை கூறுகிறது, எனவே இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 30 சதவீத படைகள் திரும்பப் பெறப்படும்" என்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட படைகள் முன்னேற்றம் குறித்து  ஆள் இல்லா விமானங்கள் மற்றும் தூதுக்குழு கூட்டங்களின் உதவியுடன் சரிபார்க்கப்படும்.

கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டு வரியில் முன்னோக்கி உள்ள இடங்களிலிருந்து டாங்கிகள திரும்பப் பெறுவதே படை திரும்ப பெறுவதின் முதல் படி ஆகும். 

ஆகஸ்ட் 30 அன்று, பாங்கோங் ஏரியின் தென் கரையில் ரெச்சின் லா, ரெசாங் லா, முக்பாரி, மற்றும் டேப்லெட் போன்ற முக்கியமான மலை உயரங்களை இந்தியா ஆக்கிரமித்திருந்தது. பிளாக்டாப் அருகே இந்தியாவும் சில படைகளை நிறுத்தி உள்ளது. சீனர்கள் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கையை எடுக்க முயன்றதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Next Story