கொரோனா தடுப்பு மருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும்படி செய்வது எப்படி? - ராகுல் காந்தி கேள்வி


கொரோனா தடுப்பு மருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும்படி செய்வது எப்படி? - ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 12 Nov 2020 7:35 AM IST (Updated: 12 Nov 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு மருந்தை ஒவ்வொரு இந்தியரிடமும் கொண்டு போய் சேர்க்க இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி, 

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை தயாரித்து இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவீதத்துக்கு மேல் தொற்றை தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரும் சவாலானது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். பைசர் நிறுவன தடுப்பூசியை சேமித்து வைக்க மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தேவைப்படும் என்பதால், இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “பைசர் நிறுவனம் நம்பகமான கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையான உத்திகளை வகுக்க வேண்டியது அவசியம். எனவே அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? எப்படி தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பாதுகாப்பது அவசியம் என்று கூறப்படும் நிலையில் அதிக வெப்பநிலை கொண்ட ஆசிய நாடுகளில் இந்த மருந்தை பயன்படுத்தவும், கடைக்கோடி மக்களுக்கும் போய் சேரும் வகையில் சரியான திட்டமிடல் அவசியம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Next Story